Monday, October 22, 2007
ஏழ்மை
ஓர் ஓவியச் சோலையிலே.....
பேசும் வண்ணச் சித்திரங்கள்
பார்பவர் கண்களை எல்லாம்
ஈர்க்கும் பல விசித்திரங்கள்;
சிந்தை மயக்கவே,
உள்ளம் வியக்கவே,
அற்புத ஓவியக் கை வண்ணம்
ஆயிரம் செல்வர்கள் விளைபேச.,
பண மூட்டைகள் குவிந்தன ஒரு பக்கம்;
அச்சோலையின் வெளியிலோ
யாசிக்கும் கைகளோடு
பேசா ஏழ்மைச் சித்திரங்கள்,
அதிசய ஓவியங்கள்
எவறும் காண விரும்பா
உயிர் சித்திரங்கள்
சுவரின்றி வரைந்த ஓவியன் ஒருவன்
அதற்கு வண்ணமும் இட மறந்து விட்டானோ?????
Thursday, October 18, 2007
பன்பாடு எங்கே போனது!!


வட்டமும் தூய்மையும்
நிலவுக்கு அழகு;
வண்ணமும் வாசமும்
பூவுக்கு அழகு;
பூவுக்கு அழகு;
கலாச்சாரமிக்க ஆடை
மனிதனுக்கு அழகு;
இன்று எங்கே போனது அந்த அழகு?
எட்டுகஜம் புடவை
இன்று சைக்கிள் துடைக்கும் துணிபோல் ஆனது
கிழிந்த இடமெல்லாம்
தைத்துப் போட்ட ஆடை;
இன்று
கிழித்து போட்டு அலைகின்றனர்
இது ஆடை சுதந்திரமாம்!
சித்திரவதை செய்யப்படும்
மனிதனுக்காக சுதந்திரம் வாங்கித்தந்தார் மகாத்மா
இன்று சில மனிதர்கள்
தாங்கள் அணியும் ஆடைக்கு
கொஞ்சம் கொஞ்சமாய்
சுதந்திரம் வாங்கித்தருகிறார்கள்!!!!
Monday, October 15, 2007
நமது செம்மொழி!

தமிழ் நாடு!
பெயரிலே இருக்கிறது.,
இருக்கும் மொழிகளிலே
செம்மையாகவும், இனிமையாகவும்
தொன்றுவது
'தமிழ்மொழி'
தமிழுக்காகப் பாடுபட்டோர்
எத்தனை பேர்!
தமிழுக்காகப் போர்க்கொடி
ஏந்தியவர்
எத்தனை பேர்!
தமிழனே!
பெயரில் தமிழை
வைத்துக் கொண்ட நீ! உன்னை,
தமிழுக்காகப் பாடுபடச்
சொல்லவில்லை;
தமிழுக்காகப் போர்க்கொடியை ஏந்த
சொல்லவில்லை;
தமிழுக்காக உயிரை விடவும்
சொல்லவில்லை;
முறையாக தமிழைக்
முறையாக தமிழைக்
கற்றாலே போதுமானது.,
கற்றதை காற்றில்விடாமல்
மனதிலேஏந்திக்கொள்!
அதுவே சுகமானது.,
Subscribe to:
Comments (Atom)
